search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மாணவர் படையினர்"

    பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    மஞ்சூர்:

    மஞ்சூர் அருகில் உள்ள நஞ்ச நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அசோக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.பேரணிக்கு என்.சி.சி.சுபேதார்கள் சந்தோஷ், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்ற காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டபொருட்களை பயன்படுத்த மாட்டோம் என தேசிய மாணவர்படை மாணவர்கள் உறுதி மொழியேற்றனர்.

    இதனையடுத்து பேரணி நரிகுளிஆடா, எல்லக்கண்டி, மொட்டோரை, கக்கன்ஜி காலனி ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும், துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சசி, வேலாயுதம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் என்.சி.சி அலுவலர் சுப்பிரமணி செய்திருந்தார்.

    ×